ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான இரண்டு அரை இறுதிச் சுற்றுகள், மலேசிய நேரப்படி இன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது. முதல் சுற்றில், ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.84 வினாடிகளில் ஓடி முதலாவதாக வந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றார்.
இரண்டாவது அரை இறுதிச் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.94 வினாடிகள் ஓடி முதலாவதாக வந்தார்.
இதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு இருவரும் தேர்வாகியுள்ளனர்.
ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் போட்டியில் கடும் போட்டிகள் நிலவும் வேளையில் மீண்டும் உசேன் போல்ட் முதலாவதாக வந்து தங்கம் வெல்வாரா என்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
இன்றே 100 மீட்டருக்கான இறுதிச் சுற்று போட்டிகளும் நடைபெறவிருக்கின்றது.
9.94 வினாடிகளில் ஓடி இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின்..