Home Featured நாடு பூப்பந்து: மலேசிய இரட்டையர் இணை அரை இறுதிக்கு முன்னேற்றம்!

பூப்பந்து: மலேசிய இரட்டையர் இணை அரை இறுதிக்கு முன்னேற்றம்!

574
0
SHARE
Ad

olympics-badminton-Goh V Shem-Tan Wee Kiongரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணைந்த கலப்பு இரட்டையர் இணை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி மலேசியாவுக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வார்கள் என்ற நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவிலும் மலேசியர்கள் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

உலகின் முதல் நிலை இரட்டையர் ஆட்டக்காரர்களாக தென் கொரியாவின் லீ யோங் டே – யூன் யியோன் சியோங் இணையை இவர்கள் மூன்று ஆட்டங்களில் (செட்களில்) 86 நிமிட போராட்டத்திற்குப் பின்னர் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்கு (மலேசிய நேரம்) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் சீனாவின் சாய் பியாவ் – ஹோங் வெய் இணையை இவர்கள் சந்திக்கின்றார்கள்.