Home Featured இந்தியா நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி!

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி!

992
0
SHARE
Ad

?

புதுடெல்லி – கடந்த 2012-ம் ஆண்டு புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வினய் சர்மா என்பவன் இன்று வியாழக்கிழமை காலை சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவனை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவனான பஸ் டிரைவர், இதற்கு முன் சிறையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.