Home Featured தொழில் நுட்பம் கேரள இளைஞருக்கு 10.7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்குகிறது பேஸ்புக்!

கேரள இளைஞருக்கு 10.7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்குகிறது பேஸ்புக்!

1100
0
SHARE
Ad

facebook-rewards-rs-10-lakh-to-kerala-youthகொல்லம் – பேஸ்புக்கில் இருந்த மோசமான பிழை ஒன்றைக் கண்டறிந்த கேரளாவைச் சேர்ந்த 20 வயது பொறியியலாளருக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

கொல்லம் எம்இஎஸ் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், கணினிப் பொறியியல் பிரிவில் படித்து வரும் அருண் எஸ்.குமார் என்பவர் பேஸ்புக்கின், வணிக மேலாளர் கருவியிலுள்ள அபாயகரமான பிழை ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அப்பிழையைப் பயன்படுத்தி, மிக எளிதில் பேஸ்புக் பக்கங்களை ஹேக் செய்துவிட முடியும் என்பதை அருண் நிரூபித்ததைத் தொடர்ந்து, பேஸ்புக் அவருக்கு இந்த சன்மானத்தை வழங்குகிறது.

#TamilSchoolmychoice

 

 

Comments