Home Featured நாடு மரியா மகன் கார் மீது சிவப்புச் சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!

மரியா மகன் கார் மீது சிவப்புச் சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!

648
0
SHARE
Ad

Maria Chin Abdullahகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் மகனுக்குச் சொந்தமான காரின் மீது மர்ம நபர்கள் சிலர் சிவப்பு சாயம் ஊற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மரியாவும், அவரது மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பெர்சே கமிட்டி உறுப்பினர் மண்டீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அரசியல் வன்முறையை நிராகரிக்க அனைவரையும் ஒன்று கூடும் படி நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய்க்கிழமை மரியாவுக்கு கொலை மிரட்டலும் வந்தது குறிப்பிடத்தக்கது.