Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக் மூலம் இனி உணவு, திரைப்பட டிக்கெட்டுகள் வாங்கலாம்!

பேஸ்புக் மூலம் இனி உணவு, திரைப்பட டிக்கெட்டுகள் வாங்கலாம்!

831
0
SHARE
Ad

facebookசான் பிரான்சிஸ்கோ – பேஸ்புக் மூலமாக உணவுப் பொருட்கள், திரைப்பட டிக்கெட்டுகள் வாங்குவது, சிகை அலங்காரம் செய்வதற்கு முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல வசதிகள் அமெரிக்கர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பில், வர்த்தக நிறுவனங்களுடன், பேஸ்புக் நேரடியாக இணைக்கப்படும் வகையில் புதிய கருவி ஒன்று கூடுதலாக நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் படி, உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பிட்சா கடையின் பேஸ்புக் பக்கத்திற்குச் சென்று அங்கு இருக்கும் ‘ஓர்டர் (Order)’ பொத்தானை அழுத்தினால் போதும், சம்பந்தப்பட்ட நபரைத் தேடி பிட்சா வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், புதிய அறிவிப்புகளை வெளியிடவும் மட்டுமே பேஸ்புக்கைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் வர்த்தகத்தையும் மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.