வாஷிங்டன் – 1980-ம் ஆண்டு தனக்கு மூன்று முறை பாலியல் தொந்தரவு கொடுத்தார் என முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மீது முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சமயத்தில் பில் கிளிண்டன் அர்கான்காஸ் மாகாண கவர்னராக இருந்தார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் கூறும் குற்றச்சாட்டுகள் கொண்ட காணொளி ஒன்று அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரபூர் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் ஆதரவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
லெஸ்லி மில்வீ என்ற அப்பெண், அர்கான்சாஸ் தொலைக்காட்சி நிலையத்தில், கேஎல்எம்என் – டிவியில் பணியாற்றிய போது, கிளிண்டனை 20 முறை நேர்காணல் செய்ததாகவும், அந்த சமயங்களில் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
படத்தொகுப்பு செய்யும் அறையில் ஒருமுறையும், நாற்காலியில் அமர்ந்திருந்த போது ஒருமுறையும், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருமுறையும் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.