சென்னை – கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற கருத்தரங்கில், இந்தியா இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக அவர் மீது தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அவ்வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இவ்வழக்கில் வைகோவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை கியூ பிரிவு காவல்துறை நிரூபிக்கவில்லை என்று கூறி அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்துள்ளது.