Home உலகம் கிளிண்டன் மகள் செல்சிக்கு பெண் குழந்தை பிறந்தது!

கிளிண்டன் மகள் செல்சிக்கு பெண் குழந்தை பிறந்தது!

1025
0
SHARE
Ad

Bill Clinton Chelsea and daughterவாஷிங்டன், செப்டம்பர் 27 – அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஹில்லாரி தம்பதியரின் ஒரே மகள் செல்சி (வயது 34) பெண் குழந்தைக்கு தாயானார்.

இவர் 2010ஆம் ஆண்டில் மூலதன வங்கியாளர் மார்க் மெஜ்வின்ஸ்கியை மணந்தார்.

அவருக்கு இன்று (அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 26) அழகான பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக ”பேஸ் புக்”, ”டுவிட்டர்”, நட்பு ஊடகங்களில் வெளியிட்டுள்ள  செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் அவர்,  ”எங்களுக்கு சார்லட் கிளிண்டன் மெஜ்வின்ஸ்கி என்ற மகள் பிறந்திருப்பதை நாங்கள் கொண்டாடுகிறோம். மார்க்கும், நானும் அன்புடனும், நன்றியுடனும், பிரமிப்புடனும் இருக்கிறோம்” என கூறி உள்ளார்.

பேத்தி பிறந்திருப்பதை கிளிண்டன், ஹல்லாரி தம்பதியர்களும் தங்களின் மகிழ்ச்சியைப் புலப்படுத்தியுள்ளனர்.