Home Featured நாடு பினாங்கில் தீபாவளி குதூகலத்தைக் குலைத்த திடீர் வெள்ளம்!

பினாங்கில் தீபாவளி குதூகலத்தைக் குலைத்த திடீர் வெள்ளம்!

584
0
SHARE
Ad

penang-flashfloods

ஜோர்ஜ் டவுன் – பினாங்கில் இன்று சில இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்த மாநில மக்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை சீர்குலைத்தது.

இன்று சனிக்கிழமை தீபாவளியன்று பிற்பகலில் பெய்த அடைமழையால், கம்போங் மலாயு ஆயர் ஈத்தாம் அருகிலுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததோடு, ஜாலான் பி.ரம்லி, ஜாலான் பாயா தெருபுங், ஜாலான் தியான் தெக், தாமான் லும்பா குடா, ஜாலான் மஸ்ஜிட் நெகிரி ஆகிய சாலைகளில்  வாகன நெரிசல் ஏற்பட்டு, அதன் காரணமாக பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

#TamilSchoolmychoice

பல இடங்களில் முழங்கால் அளவு உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. மழையால் சுங்கை டொண்டாங், சுங்கை ஆயர் ஈத்தாம் ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட நீர்வரத்து உயர்வால் வெள்ளம் ஏற்பட்டதாக பெர்னாமா செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த வெள்ளத்தினால் பல இந்திய குடும்பங்களும் பாதிக்கப்பட்டதால், அவர்களின் தீபாவளி குதூகலமும், கொண்டாட்டமும் சீர்குலைந்துள்ளன.