Home Featured நாடு மலேசியாகினி அலுவலகத்தில் திடீர் சோதனை: அம்னெஸ்டி கண்டனம்!

மலேசியாகினி அலுவலகத்தில் திடீர் சோதனை: அம்னெஸ்டி கண்டனம்!

755
0
SHARE
Ad

malaysiakini-denied-print-20141002கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் மலேசியாகினி தகவல் ஊடகத்தின் அலுவலகத்திற்குள் அதிரடியாகப் புகுந்த மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், அங்கிருந்து இரண்டு கணினிகளை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் தங்கள் இணையதளத்தில் அம்னோ அரசியல் தலைவர் டத்தோ கைருடின் அபு ஹசான், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலியை கடுமையாக விமர்சிப்பது போலான காணொளி ஒன்று வெளியிப்பட்டிருந்தது தான் இந்த திடீர் சோதனைக்குக் காரணம் என்று மலேசியாகினி தெரிவித்துள்ளது.

மேலும், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233-ன் கீழ், இணைய வசதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக தாங்கள் விசாரிக்கப்படுவதாகவும் மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதே வேளையில், சம்பந்தப்பட்ட அக்காணொளியை வெளியிட்டதில் தங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்பதால், அதனை அகற்ற தாங்கள் மறுத்துவிட்டதாகவும் மலேசியாகினி தெரிவித்துள்ளது.

இதனிடையே, மலேசியாகினி அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை, பத்திரிகை சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக, உலக மனித உரிமை இயக்கமான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது.