Home Featured உலகம் அமெரிக்காவில் இருந்து 30 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் முடிவு!

அமெரிக்காவில் இருந்து 30 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் முடிவு!

638
0
SHARE
Ad

donald-trumpவாஷிங்டன் – அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வாழும் சுமார் 30 லட்சம் பேரை வெளியேற்றவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி இருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன். அவர்களில் 20 லட்சம் பேர் போதைப் பித்தர்களாகவும், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேற்றுவோம் அல்லது சிறையில் அடைப்போம். அதோடு, மெக்சிகோ எல்லைப் பகுதியிலுள்ள எல்லைத் தடுப்புச் சுவர்கள் உயர்த்தப்படும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.