புதுடில்லி – பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயிலின் 14 தொடர் வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அந்த விபத்தின் இறுதி நிலவரச் செய்திகள்:-
- 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் உதவி நிதி வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
- இரயில்வே வழங்கியுள்ள உதவிக்கான தொலைபேசி எண்கள்: