Home Featured நாடு சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!

சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!

765
0
SHARE
Ad

bersih-10கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 19 -ம் தேதி நடைபெற்ற பெர்சே 5, சிவப்புச் சட்டைப் பேரணியின் போது, நிலம் மாசுபட்டதற்கும், அதனைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஆகும் செலவான 27,373 ரிங்கிட்டை இரு அமைப்புகளும் ஏற்க வேண்டுமென கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) அறிவித்துள்ளது.

இது குறித்து டிபிகேஎல் சமூக – பொருளாதார மேம்பாட்டு தலைமை இயக்குநர் மொகமட் சவுஃபி முகமட் கூறுகையில், நிலம் மாசுபட்டதற்கு 26,500 ரிங்கிட்டும், பாடாங் மெர்போக்கில் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு 873.66 ரிங்கிட்டும் ஆகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தொகையை இரு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களும் கட்டத் தவறினால் டிபிகேஎல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் மொகமட் சவுஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice