Home Featured நாடு காலிட் சமட் மீது தாக்குதல்!

காலிட் சமட் மீது தாக்குதல்!

833
0
SHARE
Ad

khalid-samatகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அப்போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவர்களைத் தடுத்து, காலிட் சமட்டை மீட்டுள்ளனர்.

எனினும், இச்சம்பவத்தில் பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

20 – 30 பேர் வரை கொண்ட அக்கும்பல், ‘வாழ்க பாசிர் சாலாக்!’ வாழ்க பாசிர் சாலாக்!’ என்று கோஷமிட்டவாறு காலிட்டைத் தாக்க முயற்சி செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானை, காலிட் ‘பீடை’ (Sial) என்று அழைத்ததால், இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.