Home Featured நாடு டிசம்பர் 16 முதல் சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை!

டிசம்பர் 16 முதல் சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை!

1108
0
SHARE
Ad

mrt-launchகோலாலம்பூர் – வரும் டிசம்பர் 16-ம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் சுங்கை பூலோ – காஜாங் இடையிலான மாஸ் விரைவு இரயில் போக்குவரத்து (எம்ஆர்டி) துவங்குகின்றது. இதன் மூலம் கிள்ளானில் வசிப்பவர்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கின்றது.

எம்ஆர்டி பேஸ் 1 திட்டத்தின் படி, சுங்கை பூலோ மற்றும் டாமன்சாராவிலுள்ள செமன்தானுக்கு இடையில் 12 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

mrtஇந்த 12 இரயில் நிலையங்களைச் சுற்றி 120 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

#TamilSchoolmychoice

வரும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் எம்ஆர்டி சேவைகள் முழுமையாக இயக்கத்திற்கு வரும் பட்சத்தில், பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் கிட்டத்தட்ட 400,000 பேர் பயனடையவுள்ளனர்.