பூச்சோங் – மலேசியாவுக்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வந்திருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மஇகா தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.மோகனை அவரது இல்லத்தில் சந்தித்து அளவளாவினார்.
மோகன் மிபா எனப்படும் மலேசிய இந்திய காற்பந்து சங்கத்தின் தலைவருமாவார்.
தமிழ் நாடு மற்றும் மலேசியாவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள், நடப்புகள் ஆகியவை குறித்து அவர்கள் இருவரும் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
Comments