Home Featured இந்தியா ஹீராகண்ட் விபத்து: மரண எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது!

ஹீராகண்ட் விபத்து: மரண எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது!

764
0
SHARE
Ad

புபனேஸ்வர் – ஹீராகண்ட் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அண்மைய நிலவரச் செய்திகள்:

  • சட்டிகஸ்கர் மாநிலத்தின் ஜக்டல்புர் நகரிலிருந்து, ஒடிசா மாநிலத்திலுள்ள புபனேஸ்வர் நகர் நோக்கிச் செல்லும் விரைவு இரயில் ஆந்திர மாநிலத்தின் பிரதேசத்தின் வழியாகச் செல்கின்றது. ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் எல்லைப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசப் பகுதியில் இந்த விரைவு இரயில் விபத்துக்குள்ளானது.

hirakand-express-jagdalpur-bubaneswar-mapசட்டிஸ்கர் மாநிலத்தின் ஜக்டல்புர் நகரிலிருந்து, ஒடிசாவின் புபனேஸ்வர் பயணப் பாதையைக் காட்டும் வரைபடம்…

  • ஏழு இரயில் பெட்டிகள் மற்றும் இரயிலின் இயந்திரம் அமைந்துள்ள பெட்டி ஆகியவை தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.
  • ஆந்திரப் பிரதேசத்தின் குனேரு இரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து நேற்று சனிக்கிழமை இரவு 11.00 மணிக்கு (இந்திய நேரம்) நிகழ்ந்தது.
  • ஒடிசா மாநிலத்திலுள்ள ராயகடா என்ற இடத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.

india-states-mapவிபத்துக்குள்ளான ஹீராகண்ட் விரைவு இரயில் செல்லும் சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிசா ஆகிய மாநிலங்களைக் காட்டும் வரைபடம்….

  • காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்கலாம் என்றும் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்வதால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
  • கடந்த 12 வாரங்களில் நான்காவது முறையாக கணிசமான உயிர்ப் பலிகளைக் கொண்ட இரயில் விபத்து நிகழ்ந்துள்ளதால் இந்திய இரயில்வே மீதான கண்டனங்கள் எழுந்துள்ளன.