Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் ஒத்திவைப்பு – மணப்பாறையில் நடைபெற்றது – போராட்டம் தொடர்கின்றது!

ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் ஒத்திவைப்பு – மணப்பாறையில் நடைபெற்றது – போராட்டம் தொடர்கின்றது!

665
0
SHARE
Ad

jallikattu759

சென்னை – ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு அறிவிக்கப்படும் வரையில் மெரினா கடற்கரையை விட்டு நகரமாட்டோம் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அலங்காநல்லூரில், சாலை மறியல் போராட்டம் தொடர்வதால், எதிர்பார்த்தபடி அங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வேறொரு இடத்தில் ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் திருச்சி, மணப்பாறையில் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.