“போராட்டக்காரர்களை முதல்வர் சந்திக்க வேண்டும் என்று சினிமாவாலா கமல்ஹாசன் கூறுவது எவ்வளவு முட்டாள் தனமானது. மதுரையில் முதல்வர் அதனை முயற்சித்துப் பார்த்த போது என்ன ஆனது?” என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.
அதற்கு டுவிட்டரிலேயே பதிலளித்த கமல்ஹாசன், “ஹாய் சுவாமி.. நான் தமிழ்வாலா.. முதல்வர்கள் அவரது மக்களைச் சந்திக்க தான் வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்” என்று கமல் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு மேல் சாமியின் அபத்தமான கருத்துக்களுக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்றும் கமல் தெரிவித்தார்.