Home Featured உலகம் டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!

டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!

933
0
SHARE
Ad

obama-donald-trump-meeting-after-electionsவாஷிங்டன் – புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற 10 நாட்களில் குடிநுழைவு குறித்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளுக்கு, அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதம் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில், தனிநபர்களைப் பிரித்துப் பாகுபாடு பார்க்கும் முடிவை ஒபாமா கடுமையாக மறுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் வெளியிட்ட உத்தரவின் படி, அமெரிக்காவில் குடிநுழைவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய பெரும்பான்மை முஸ்லீம் மக்களைக் கொண்ட 7 நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பயங்கரவாதத்திற்கு இந்த நாடுகள் துணைபோகின்றன என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதே வேளையில், அமெரிக்காவுக்குள் அகதிகளை அனுமதிக்கும் நடைமுறையை அடுத்த 120 நாட்களுக்குத் தடை செய்தும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எல்லா பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அகதிகளை அனுமதிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.