Home Featured நாடு பத்துமலை தைப்பூசத்தில் ஊதல், முகமூடி விற்கத் தடை!

பத்துமலை தைப்பூசத்தில் ஊதல், முகமூடி விற்கத் தடை!

753
0
SHARE
Ad

Thaipusam-2014-statue-440-x-215கோலாலம்பூர் – பத்துமலையில், தைப்பூசத் திருவிழா, வரும் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் குறிப்பிட்ட சில பொருட்களை விற்பனை செய்யவும், அதனைப் பயன்படுத்தவும் சிலாங்கூர் அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்து சமயத்திற்கும், தைப்பூசத் திருவிழாவிற்கும் சம்பந்தமே இல்லாத ஊதல், முகமூடி போன்ற பொருட்களை திருவிழாவில் விற்பனை செய்யத் தடை விதிக்க சிலாங்கூர் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அவ்வாறு தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

திருவிழாவில் இந்த இரு பொருட்களும் விற்பனை செய்யப்படாமல் இருக்க, அதனைக் கண்காணிக்கும் பொறுப்பை செலாயாங் நகராண்மைக் கழகம் மற்றும் ஸ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானம் ஆகியவற்றிடம் ஒப்படைத்துள்ளது. இந்த இரு நிர்வாகமும் காவல்துறையின் உதவியுடன் கண்காணித்து, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தலைமையிலான சிறப்புப் பணிக்குழு, இது தொடர்பாக செலாயாங் நகராண்மைக் கழகத்திற்குக் கடிதமும் அனுப்பியுள்ளது.

விகாரமான முகமூடியும், அதிக சத்தமுள்ள ஊதல்களும் தைப்பூசத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதனை பிப்ரவரி 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு விற்பனை செய்ய மாநில அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.