Home Featured நாடு அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்குத் தடை இல்லை – அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியது!

அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்குத் தடை இல்லை – அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியது!

915
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி குடிநுழைவு சீர்திருத்த நடவடிக்கையில், மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் வெளியான அதிபர் உத்தரவில், இடம்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் மலேசியா இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மலேசியர்கள் முறையான விசா மூலம் அமெரிக்காவிற்குத் தொடர்ந்து பயணம் செய்யலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

 

Comments