Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை! மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது!

ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை! மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது!

841
0
SHARE
Ad

jayalalithaa

சென்னை – மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஆரூடங்கள் பரவி வந்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை தமிழக அரசின் ஏற்பாட்டில்அப்போலோவின் நிர்வாகம் இன்று திங்கட்கிழமை நடத்தியது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இலண்டனிலிருந்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் பிலேயும் ஏனைய அப்போலோ மருத்துவர்களைக் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

#TamilSchoolmychoice

அந்த மருத்துவர் குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட தகவல்களின் முக்கிய அம்சங்களில் சில:

  • ஜெயலலிதாவுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது. அவருக்குப் பின்னர் கிருமிகளால் தொற்று ஏற்பட்டது. இதனால் இரத்தத்தில் கிருமிகள் கலந்து விட அதனால் செப்சிஸ் (sepsis) என்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
  • இதனால் ஜெயலலிதாவின் உடல் உள்ளுறுப்புகளும் பாதிப்படைந்தன. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
  • ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை. மாற்று உறுப்பு அறுவைச் சிகிச்சை எதுவும் அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை.
  • ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான். டிசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின்னர் டிசம்பர் 6-அதிகாலையில் சுமார் 20 நிமிடங்களில் உடல் பதப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • ஜெயலலிதாஅவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் தானியங்கி காணொளி புகைப்படக் கருவிகள் (சிசிடிவி) எதுவும் பொருத்தப்படவில்லை. அவ்வாறு பொருத்துவது மருத்துவமனையின் நடைமுறையும் அல்ல. அப்படியே காணொளிகள் எடுக்கப்பட்டாலும் அதனை  நோயாளியின் தனிஉரிமை காரணமாக மருத்துவமனை வெளியிட முடியாது.
  • நோயாளி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவரைப் புகைப்படம் எடுப்பது மருத்துவமனையின் நடைமுறையல்ல.
  • ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டனர். அதற்கான சிகிச்சைகளையும் வழங்கினர். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
  • இடைத் தேர்தல் வேட்பாளர்கள் நியமனங்கள் தொடர்பான பாரங்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டபோது அவர் சுயநினைவோடுதான் இருந்தார். அவரோடு நானே பேசினேன் என ரிட்டர்ட் பிலே கூறியிருக்கிறார்.
  • ஜெயலலிதாவுக்கு ஆன மருத்துவ செலவுகள் 5.5 கோடி ரூபாயைத் தாண்டியது என்றும் அந்த மருத்துவ கட்டணம் மீதான ஆவணங்கள் ஜெயலலிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவ நிர்வாகம் கூறியது.

இலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே நேரடியாக வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல விளக்கங்களைத் தந்திருப்பதால் இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை சசிகலா தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் என்னும் நிலையில் இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டிருப்பது, சசிகலா மீதான சந்தேகங்களை நீக்கும், களையும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு