Home Featured நாடு “தவளைகள் போல் தாவிக் கொண்டிருப்பது நல்லதல்ல” – சைட்டுக்கு மகாதீர் அறிவுரை!

“தவளைகள் போல் தாவிக் கொண்டிருப்பது நல்லதல்ல” – சைட்டுக்கு மகாதீர் அறிவுரை!

683
0
SHARE
Ad

zaid-ibrahimகோலாலம்பூர் – முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஜசெக கட்சியில் இணைவதாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், அது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், “முன்னாள் அம்னோ தலைவர் ஜசெக-வில் இணைவது சற்று விசித்திரமாக இருக்கின்றது. சைட் ஜசெக-வில் தொடர்ந்து இருப்பார் என நம்புகிறேன். தவளைகள் போல் தாவிக் கொண்டே இருப்பது நல்லதல்ல. எதிர்கட்சியில் இணைய முடிவு செய்த அனைவருமே தவளைகளாக இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன்” என்று கூறினார்.