Home Featured நாடு ஜசெக-வில் இணைந்தார் சைட் இப்ராகிம்!

ஜசெக-வில் இணைந்தார் சைட் இப்ராகிம்!

985
0
SHARE
Ad

zaid-ibrahimகோலாலம்பூர் – ஜசெக கட்சியில் இணைவதாக முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அம்னோ மற்றும் பிகேஆர் கட்சியில் இருந்த காலத்தை விட ஜசெக-வில் கூடுதலாக தான் இணைந்து இருக்க முடியும் என நம்புவதாக சைட் தெரிவித்தார்.

“நான் ஜசெக-வில் இணைவதற்கு முக்கியக் காரணம் அதிகமான மலாய்க்காரர்கள் இக்கட்சியில் இனி இணைவார்கள் என்பதால் தான். ஜசெக இந்த நாட்டைக் காப்பாற்றும், மலேசியாவை மீட்பதற்கு இக்கட்சி உதவி செய்யும்” என்று இன்று சிலாங்கூர் டிராபிகானா கோல்ஃப் & கன்ட்ரி ரிசார்ட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைட் கூறினார்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பில் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ சனுசி ஜுனைட், அமனா நெகாரா கட்சியின் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைட் இப்ராகிம் ஜெசக-வில் இணைவது குறித்து கருத்துத் தெரிவித்த லிம் கிட் சியாங், “ஜசெக-விற்கு சைட் இப்ராகிம் ஒரு சொத்து. ஜசெக-வின் போராட்டத்திற்கு சைட் உதவி செய்வார். சைட் எத்தனை நாட்கள் ஜசெக-வில் இருப்பார் என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், சைட் ஜசெக-வில் காலத்திற்கும் செயல்பட்டு, கட்சிக்கு முக்கியப் பங்காற்றுவார்.” என்று தெரிவித்தார்.