Home Featured உலகம் நியூசிலாந்தில் 400 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின! 300 திமிங்கிலங்கள் இறந்தன!

நியூசிலாந்தில் 400 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின! 300 திமிங்கிலங்கள் இறந்தன!

732
0
SHARE
Ad

Whalesவெலிங்டன் – நியூசிலாந்து கடற்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 400 திமிங்கிலங்கள், கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை அந்நாட்டு வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை எனக் கூறப்படுகின்றது.

கரை ஒதுங்கியிருக்கும் 400 திமிங்கிலங்களில் ஏற்கனவே 300 இறந்துவிட, எஞ்சியிருக்கும் 100 திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் தன்னார்வர்கள் பலர் போராடி வருகின்றனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தத் திமிங்கிலங்களின் மீது போர்வைகளைப் போர்த்தியும், கடல்நீரை தெளித்தும் காப்பாற்றும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

உலகளவில் திமிங்கிலங்கள் அதிகமாகக் கரை ஒதுங்கும் நாடுகளில் நியூசிலாந்தும் இடம்பெற்றுள்ளது. இன்று நடந்துள்ள சம்பவம் இதுவரையில்லாத அளவில் மிக மோசமானது என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த 1918-ம் ஆண்டும், சாத்தாம் தீவுகளில் நடந்த சம்பவம் தான் உலகிலேயே மிக மோசமான சம்பவமாகக் கூறப்படுகின்றது. சுமார் 1,000 திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் அங்கு கரை ஒதுங்கின.

அடுத்ததாக, கடந்த 1985-ம் ஆண்டு, ஆக்லாந்தில் சுமார் 450 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.