Home Featured தொழில் நுட்பம் தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? – காணொளி விளக்கம்.

தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? – காணொளி விளக்கம்.

982
0
SHARE
Ad
செல்லினத்தில் இரண்டு தமிழ் விசைமுகங்கள் வழங்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழையே முதன்மொழியாகப் புழங்கும் பயனர்கள் தமிழ்99 விசைமுகத்தையும் அவ்வப்போது தமிழில் எழுதுவோர் அஞ்சல் விசைமுகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
-sellinam- Screen_Shot_-keyboard tamil
1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் கண்டதால், தமிழ்99 விசைமுகம், வெளியிடப் பட்ட ஆண்டோடு சேர்ந்த அதன் பெயரைப் பெற்றது.
திறன் கருவிகள் பொதுவானப் பயன்பாட்டில் இல்லாத காலம். கணினிப் பயன்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது தமிழ்99. இந்த அமைப்பிற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறப்பு விசைப் பலகைகளும் அப்போது வெளிவந்தன. இருந்தாலும் இந்தப் பலகைகள் பரவலான விற்பனைக்கு வரவில்லை. தேடிச் சென்று வாங்க வேண்டியச் சூழலே இருந்தது.தொடுதிரையோடு வெளிவந்த திறன்கருவிகள் தமிழ்99 அமைப்பைக் கொண்டு தமிழில் தட்டெழுதுவதை மிகவும் எளிமையாக்கி உள்ளன. திரையில் தோன்றும் தமிழ்99 விசைமுகம், தமிழ் எழுத்துக்களோடே தோன்றுகின்றது. எனவே எழுத்துகளைத் தேடுவதற்கான தேவை இல்லாமல் போகிறது. தமிழ் விசைகளைக் கொண்டே தமிழில் எழுதுவதை இது மிகவும் எளிமைப் படுத்தியுள்ளது.முரசு அஞ்சல் செயலியில் உள்ள தமிழ்99 அமைப்பைப் போலவே, செல்லினத்தில் உள்ள அமைப்பும், இந்த விசைமுகத்தின் முழுமையான பயப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது.

தமிழ்99 விசைமுகத்தின் விளக்கத்தை ஏற்கனவே ஒரு பதிவில் வழங்கி இருந்தோம்.
எவ்வளவுதான் எழுத்து வடிவில் விவரங்களைத் தந்தாலும், ஒருசில மணித்துளிகளில் ஒரு நகர்படம் காட்டும் அளவுக்குத் தெளிவாகத் தர இயலுமா?

செல்லினத்தில் உள்ள தமிழ்99 விசைமுகத்தின் பயன்பாட்டைப் பற்றி ஒரு குறுங்காணொளியாக வெளியிட்டுள்ளார் செல்லினத்தின் ஆர்வலரும் பயனருமான திரு சிவ தினகரன். அதனை இங்கு பகிர்வதில் மகிழ்கிறோம்:

#TamilSchoolmychoice

நன்றி – செல்லினம்