Home English News நஜிப்-ரஜினி சந்திப்பு (படக் காட்சிகள்)

நஜிப்-ரஜினி சந்திப்பு (படக் காட்சிகள்)

1171
0
SHARE
Ad

najib-rajini-3-houseசென்னை – இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை தனது சென்னைப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது, தமிழகத்தில் மிகப் பிரபலமான செய்தியாகி விட்டது.

அனைத்து இந்தியத் தொலைக்காட்சிகளும் நஜிப்-ரஜினி சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை ஒளிபரப்பின.

அதிலும் மலேசியா போன்ற ஒரு முக்கிய அயல் நாட்டின் பிரதமர், நேரடியாக ரஜினியின் இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்ததால், அனைத்து இந்திய ஊடகங்களின் கவனமும் இந்த சந்திப்பை நோக்கித் திரும்பின.

#TamilSchoolmychoice

ரஜினியைச் சந்தித்த பின்னர் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நஜிப் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய, உடனடியாக அந்தப் புகைப்படம் ஆயிரக்கணக்கில் பல மலேசியர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நஜிப் – ரஜினி சந்திப்பு படக் காட்சிகள்:-

najib-rajini-1நஜிப்புக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொன்னாடை அணிவித்த ரஜினி – பின்னணியில் இருக்கும் புகைப்படம் ரஜினியின் ஆன்மீகக் குழு பாபாஜி

najib-rajini-4-houseரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருடன் நஜிப்…

najib-rajini-2-selfieரஜினியோடு ஒரு தம்படம் எடுக்க முற்படும் நஜிப்…

najib-rajini-selfieநஜிப் ரஜினியோடு எடுத்துக் கொண்ட தம்படம் (செல்பி)

-செல்லியல் தொகுப்பு