Home Featured நாடு சித்தியவான் பாலத்தில் விரிசலா? – பொதுப் பணித்துறை மறுப்பு!

சித்தியவான் பாலத்தில் விரிசலா? – பொதுப் பணித்துறை மறுப்பு!

702
0
SHARE
Ad

Perakமஞ்சோங் – சித்தியவான் பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாக அண்மையில் பேஸ்புக்கில் பரவிய தகவல் ஒன்றை பொதுப்பணித்துறை மறுத்திருக்கிறது.

மஞ்சோங் பொதுப்பணித்துறை பொறியியலாளர் ஹஸ்லினா மொகமட் இசா இது குறித்து பெர்னாமாவிடம் தெரிவித்திருக்கும் தகவலில், பேராக் மாநிலம் சித்தியவானில் உள்ள மூன்று பாலங்களான செகாரி – சித்தியவான் பாலம், ராஜா பெர்மாய்சூரி பைனுன் பாலம் மற்றும் செமாலான் பாலம் ஆகியவற்றில் எந்த ஒரு விரிசலும் இல்லை. பயன்படுத்துவதற்கு அவை பாதுகாப்பானது தான் என்று ஆய்வுக்குப் பிறகு தெரிவித்திருக்கிறார்.

மேலும், பேஸ்புக்கில் பகிரப்பட்ட பாலம், பேராக் மாநிலத்தில் புதிதாகக் கட்டுமானத்தில் இருக்கும் வேறொரு பாலம் என்றும் ஹஸ்லினா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“பாலத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் கிராமவாசிகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், சில பொறுப்பற்ற நபர்களால் அத்தகவல் பரப்பப்பட்டிருக்கிறது” என்று ஹஸ்லினா கூறினார்.