Home Featured உலகம் இந்திய வர்த்தகக் கப்பலை சோமாலியக் கொள்ளையர்கள் கடத்தினர்!

இந்திய வர்த்தகக் கப்பலை சோமாலியக் கொள்ளையர்கள் கடத்தினர்!

1038
0
SHARE
Ad

Somaliaபோசாசோ – சோமாலியா கடற்பகுதியில் இந்திய வர்த்தகக் கப்பல் ஒன்றை, கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருப்பதாக, அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவர் ரைட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இன்று திங்கட்கிழமை தகவல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை, துபாயில் இருந்து போசாசோவுக்கு அக்கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அக்கப்பலையும், அதிலிருந்த 11 பணியாளர்களையும் பிணை பிடித்த கொள்ளையர்கள், புண்ட்லேண்ட் உள்ள ஐல் பகுதிக்கு கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.