புதுடில்லி – மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து பெறலாம் என்ற இஸ்லாமியச் சட்ட நடைமுறையைத் தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகின்றது என்று அறிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், இந்த இஸ்லாமியச் சட்ட நடைமுறையை இஸ்லாமியப் பிரிவினரே தங்களுக்குள் தீர்வு காண விட்டுவிட வேண்டும் என பல முஸ்லீம் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே வேளையில், இஸ்லாமியச் சமூகத்தின் பெண்மணிகள் பலர் இந்த முடிவை எடுத்ததற்காக நரேந்திர மோடிக்குப் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் மே 11-ஆம் தேதி கூடவிருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின்வழி, ஒரு வழக்கில், ‘தலாக்’ சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நிலையில், மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.