Home Featured வணிகம் அருள் கந்தா நீக்கப்பட்டாரா?

அருள் கந்தா நீக்கப்பட்டாரா?

987
0
SHARE
Ad

Arul Kanda

புத்ரா ஜெயா – 1எம்டிபி நிறுவனத்தின் தலைவரான அருள் கந்தா, பண்டார் மலேசியா நிறுவனத்திலிருந்தும், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்திலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அந்த முடிவை பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் துன் ரசாக் எடுத்திருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்ச்சைககளுக்கும்,  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காகியிருக்கும் 1எம்டிபி நிறுவனம், கடந்த ஆண்டில் நிதி அமைச்சால் கையகப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இஸ்கண்டார், வாட்டர்பிரண்ட் எனப்படும் மலேசிய நிறுவனமும் (Iskandar Waterfront Holdings-IWH) சீனா இரயில்வே என்ஜினியரிங் காப்பரேஷன் என்ற நிறுவனமும் (China Railway Engineering Corp – CREC) இணைந்த கூட்டமைப்பு, 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து பண்டார் மலேசியா மேம்பாட்டுத் திட்டத்தை வாங்கும் ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பண்டார் மலேசியா திட்டத்தின் உரிமையாளரான நிதியமைச்சு முழுமையான பங்குதாரர் என்ற முறையில் யாரையும் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்றும் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும் அருள் கந்தா தெரிவித்திருக்கின்றார்.