ஹங்சௌ – சீன அதிபரின் அழைப்பினை ஏற்று சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஹங்சௌ நகரிலுள்ள பிரபல சீன நிறுவனமான அலிபாபாவுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்தார்.
சீனா முன்மொழிந்திருந்துக்கும் புதிய ‘சில்க் பாதை’ (பழங்காலத்தில் வணிகத்துக்காக சீனாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு உருவாக்கப்பட்ட பயணப் பாதை) மீதான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நஜிப் சீனா வந்திருக்கின்றார்.
ஹங்சௌ நகரில் அவருக்கு அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜேக் மா வரவேற்பளித்தார்.
Comments