Home Featured நாடு பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!

பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!

848
0
SHARE
Ad

Hadi-Awang-Anwar-Ibrahimகோலாலம்பூர் – பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஷரியா சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் நடவடிக்கையில், பிகேஆர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுவது தவறானது என்றும் அன்வார் குறிப்பிட்டிருக்கிறார்.

“நானும், பிகேஆர் தலைவரும் (டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்) ஹாடியின் உரிமையை மதித்து அறிக்கை வெளியிட்டதோடு, நாடாளுமன்ற கமிட்டிக்கும் அதனைப் பரிந்துரை செய்ததை பாஸ் தலைமைத்துவம் முறையாக வாசிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது” என்று அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.