Home Featured நாடு சீபீல்ட் ஆலய விவகாரம் : புதன்கிழமை அஸ்மின் அலியிடம் கோரிக்கை மனு

சீபீல்ட் ஆலய விவகாரம் : புதன்கிழமை அஸ்மின் அலியிடம் கோரிக்கை மனு

994
0
SHARE
Ad

seafield-mariamman-temple-meeting05062017 (2)

கிள்ளான் – நேற்று திங்கட்கிழமை இரவு மஇகாவினரும், சமூக இயக்கப் பிரதிநிதிகளும் இணைந்து கிள்ளானில் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) பிற்பகல் 1.30 மணியளவில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை தற்போதிருக்கும் அதே இடத்தில் நிலைநிறுத்தும் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்படும்.

mic-kota raja-seafield-mariamman temple-meeting

#TamilSchoolmychoice

சுமார் 100 பேர் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். மஇகா கோத்தா ராஜா தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொகுதித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மணியம் மற்றும் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இந்த கோரிக்கை மனு வழங்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் கோரிக்கை மனு வழங்கும் இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடத்தப்படவிருக்கின்றது. எனவே, பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நடத்தப்படும் இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கப்படுகின்றார்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை கிள்ளானில் நடைபெற்ற கூட்டத்தின் படக் காட்சிகள்:

seafield-mariamman-temple-meeting05062017 (1)ஐபிஎப் கட்சியைச் சேர்ந்த பினாங்கு மு.வீ.மதியழகன்…

seafield-mariamman-temple-meeting05062017 (10)மஇகா இளைஞர் பகுதிச் செயலாளர் அரவிந்த் கிருஷ்ணன்…

seafield-mariamman-temple-meeting05062017 (4)

ஐபிஎப் கட்சியைச் சேர்ந்த வீரா உரையாற்றுகிறார்….

seafield-mariamman-temple-meeting05062017 (7)டத்தோ சந்திரகுமணன்…..

seafield-mariamman-temple-meeting05062017 (12)மஇகா காப்பார் தொகுதித் தலைவர் கோபால்…