இலண்டன் – இதுவரை வெளிவந்த முடிவுகளின் படி பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், தொங்கு நாடாளுமன்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 313 தொகுதிகளைப் பெற்ற வேளையில் தொழிலாளர் கட்சி (லேபர்) 260 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மக்கள் செல்வாக்கை இழந்திருக்கும் பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டுமென தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்து பிரதேசக் கட்சியான ஸ்காட்லாந்து நேஷனல் பார்ட்டி 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 35 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றன.
தெரசா மே எந்த நேரத்திலும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் மன நிலையில் உள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.