Home Featured நாடு சிலாங்கூர் சுல்தானின் இளைய சகோதரி நல்லடக்கம் செய்யப்பட்டார்!

சிலாங்கூர் சுல்தானின் இளைய சகோதரி நல்லடக்கம் செய்யப்பட்டார்!

813
0
SHARE
Ad

Selangorsultansisterdemiseஷா ஆலம் – சிலாங்கூர் சுல்தானின் இளைய சகோதரி, தெங்கு புத்ரி சோஃபியா சுல்தான் சலாஹுதின் அப்துல் அஜிஸ் ஷாவின் (வயது 68) நல்லுடல், செக்சன் 5-ல் உள்ள ஷா ஆலம் அரச கல்லறையில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரச சடங்குகளின் படி நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, தெங்கு பெர்மாய்சூரி சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் மற்றும் ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமிர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஷாம்சிதர் தாஹாரின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

தெங்கு புத்ரி சோஃபியாவின் மூத்த மகன் ராஜா ஜாஸ்ரில் அஷ்ருல் ராஜா ஜாபர் (வயது 37) கூறுகையில், தனது அன்னை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாகச் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், கடந்த வியாழக்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தன்னை சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றும் படி அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அன்றைய மதியம் 3 மணியளவில் அவர் இறந்துவிட்டதாகவும் ராஜா ஜாஸ்ரில் தெரிவித்தார்.

படம்: நன்றி Bernama