திருவனந்தபுரம் – கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் கிட்டத்தட்ட 30,000 பேர் டிங்கி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு என பல பகுதிகளில் ஏடிஎஸ் கொசுக்களின் காரணமாக ஆயிரக்கணக்கானோருக்கு டிங்கி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் போதுமான இடமின்றி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை உடனடியாக டிங்கியைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.