Home Featured நாடு வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா

வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான் ஹராப்பான் யாரைத் தேர்வு செய்யவிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 14-வது பொதுத்தேர்தலில் முதலில் நாங்கள் வெற்றியடைந்த பின்னரே பிரதமர் யார் என்பது குறித்துப் பேச முடியும் என்று தெரிவித்தார்.