Home Featured உலகம் பெர்த்: பாலியல் குற்றத்திற்காக மலேசிய விமானிக்கு 13 ஆண்டுகள் சிறை!

பெர்த்: பாலியல் குற்றத்திற்காக மலேசிய விமானிக்கு 13 ஆண்டுகள் சிறை!

888
0
SHARE
Ad

பெர்த் – 21 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், கத்தி முனையில் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக மலேசிய விமானிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

ஆல்பிரட் ஜெரார்ட் எராவெலி (வயது 50) என்ற அந்நபர், 21 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி மாணவராக இருந்த போது, அங்கு பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

வீட்டில் அவரது மரபணுக்கள் காணப்பட்டதையடுத்து எராவெலிக்கு எதிராக ஆதாரங்கள் வலுப்பெற்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தான் அப்பெண்ணின் விருப்பத்தின் பேரில் தான் உறவு வைத்திருந்ததாகவும், கட்டிப் போட்டு பாலியல் வல்லுறவு செய்வது ஒருவித சடங்கு என்றும் அந்நபர் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார்.

தன்னுடனான உறவு கசந்ததும், அப்பெண் தன்னை பணத்திற்காக மிரட்டத் தொடங்கினார் என்றும் அந்நபர் கூறினார்.

எனினும், ஆஸ்திரேலிய நீதிமன்றம் இவ்வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி மாணவராக இருந்த இச்சம்பவத்திற்குப் பிறகு அந்நபர் மலேசியாவிற்குத் திரும்பி ஏர் ஆசியா நிறுவனத்திற்கு விமானியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு எராவெலி, சிட்னி நகருக்குச் சென்ற போது அங்கு காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.