Home Featured கலையுலகம் ‘காலா’ படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

‘காலா’ படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

936
0
SHARE
Ad

சென்னை – ‘கபாலி’ திரைப்படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித் கூட்டணியில், உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ‘காலா’.

மும்பை ‘தாராவி’ பகுதியை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மீண்டும் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், மீதிக் காட்சிகளைப் படமாக்க சென்னையில் ‘தாராவி’ போன்ற செட் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கீழே கிடந்த மின்சார வயரைத் தவறுதலாக மிதித்துவிட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

பலத்த காயமடைந்த அவரை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சென்னைக் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.