Home இந்தியா மக்கள் விரும்பினால் மட்டுமே கர்நாடகாவில் காலா: முதல்வர் குமாரசாமி

மக்கள் விரும்பினால் மட்டுமே கர்நாடகாவில் காலா: முதல்வர் குமாரசாமி

915
0
SHARE
Ad

பெங்களூர் – வரும் ஜூன் 7-ம் தேதி,பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், அத்திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படுமா? இல்லையா? என உறுதியாகத் தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, “மக்கள் விரும்பினால் மட்டுமே கர்நாடகாவில் காலா திரையிடப்படும். மக்கள் விரும்பாத பட்சத்தில் ஒன்று செய்ய முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.