Home Featured நாடு சுங்கைபூலோ-செமந்தான் எம்ஆர்டி தொடங்கியது

சுங்கைபூலோ-செமந்தான் எம்ஆர்டி தொடங்கியது

581
0
SHARE
Ad

mrt-train

கோலாலம்பூர் – கிள்ளான் பள்ளத்தாக்கு வாசிகள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த எம்ஆர்டி இரயில் சேவைகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. காஜாங் – சுங்கை பூலோ வரையிலான பயணச் சேவையின் முதல் கட்டமாக சுங்கை பூலோ முதல் டாமன்சாரா பகுதியிலுள்ள செமந்தான் வரை – 12 பயணிகள் முகப்பிடங்களோடு (ஸ்டேஷன்) முதல் கட்ட சேவைகள் இன்று தொடங்கியுள்ளன.

mrt-1st-phase-12-stations

#TamilSchoolmychoice

முதல் கட்ட 12 பயணிகள் முகப்பிடங்களைக் காட்டும் வரைபடம்

ஒவ்வொரு முகப்பிடத்திலிருந்தும் ஃபீடர் பஸ் (Feeder Bus) எனப்படும் இணைப்பு பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் ஒரு ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mrt-link-buses

முகப்பிடங்களிலிருந்து இணைப்பு சேவைகளை வழங்கும் பேருந்துகள்…

இதற்கிடையில் நேற்று எம்ஆர்டி சேவைகளைத் தொடக்கி வைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக் அடுத்த ஒரு மாத காலத்திற்கு, மக்கள் எம்ஆர்டி சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளார்.

najib-riding-mrt-with-crowdஎம்ஆர்டி இரயிலில் சக பயணிகளுடன் நஜிப் (படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் தளம்)

mrt-imageசேவையில் ஈடுபடவிருக்கும் எம்ஆர்டி இரயில் வண்டிகள்