Home Featured தமிழ் நாடு கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

597
0
SHARE
Ad

karunanidhiசென்னை – திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் திமுக-வின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, டிசம்பர் 7-ம் தேதி தான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.