கோலாலம்பூர் – கிள்ளான் பள்ளத்தாக்கு வாசிகள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த எம்ஆர்டி இரயில் சேவைகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. காஜாங் – சுங்கை பூலோ வரையிலான பயணச் சேவையின் முதல் கட்டமாக சுங்கை பூலோ முதல் டாமன்சாரா பகுதியிலுள்ள செமந்தான் வரை – 12 பயணிகள் முகப்பிடங்களோடு (ஸ்டேஷன்) முதல் கட்ட சேவைகள் இன்று தொடங்கியுள்ளன.
முதல் கட்ட 12 பயணிகள் முகப்பிடங்களைக் காட்டும் வரைபடம்
ஒவ்வொரு முகப்பிடத்திலிருந்தும் ஃபீடர் பஸ் (Feeder Bus) எனப்படும் இணைப்பு பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் ஒரு ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முகப்பிடங்களிலிருந்து இணைப்பு சேவைகளை வழங்கும் பேருந்துகள்…
இதற்கிடையில் நேற்று எம்ஆர்டி சேவைகளைத் தொடக்கி வைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக் அடுத்த ஒரு மாத காலத்திற்கு, மக்கள் எம்ஆர்டி சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளார்.
எம்ஆர்டி இரயிலில் சக பயணிகளுடன் நஜிப் (படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் தளம்)
சேவையில் ஈடுபடவிருக்கும் எம்ஆர்டி இரயில் வண்டிகள்