Home Featured உலகம் ‘சிஎன்என்’ முகத்தைக் குத்திய டொனால்ட் டிரம்ப்

‘சிஎன்என்’ முகத்தைக் குத்திய டொனால்ட் டிரம்ப்

1463
0
SHARE
Ad

வாஷிங்டன் – ஊடக சர்ச்சைகளுக்குத் தொடர்ந்து தீனி கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் ஒரு புதிய வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். அமெரிக்காவின் முதல் நிலை செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான சிஎன்என் என்ற தொலைக்காட்சி சின்னத்தை முகத்தில் கொண்ட ஒரு நபரை ஒரு மல்யுத்தக் கோதாவில் குத்திச் சாய்த்து மீண்டும் மீண்டும் அவர் முகத்தில் குத்துவது போல் ஒரு காணொளி (வீடியோ) காட்சியைத் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டிருக்கிறார்.

பத்திரிக்கை நிறுவனம் ஒன்றைத் தாக்குவது போல் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளியைத் தொடர்ந்து, சிஎன்என் தொலைக்காட்சியும் மற்ற சில ஊடகங்களும் டிரம்ப் பத்திரிக்கைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளன.

#TamilSchoolmychoice

அந்த டுவிட்டர் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#FNN

Comments