சென்னை – அண்மையக் காலமாக அதிமுக கட்சிக்கு எதிராகவும், அரசியல் விவகாரங்களிலும் தொடர்ந்து கடுமையான கருத்துக்களை முன்வைத்து வரும் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி அலைவரிசையில், ரங்கராஜ் பாண்டே நடத்தும் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
வழக்கம்போல கமல் வழங்கிய பல பதில்கள் மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதோடு, அவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த பகைமையை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தால், அவரையும் விமர்சனம் செய்வேன் என்றும் கூறிய கமல், ஆனால் அதனை அவரிடம் நேரடியாகத்தான் கூறுவேனே தவிர, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூற மாட்டேன் காரணம் அவருக்கும் எனக்கும் இடையில் இருக்கும் 45 ஆண்டுகால அழுத்தமான நட்பு என்று ரங்கராஜ் பாண்டேயுடனான நேர்காணலின்போது தெரிவித்தார்.
அதே வேளையில் தன்னிடம் இயக்கம் இருப்பதாகவும் ஆனால், அதனை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் இதுவரையில் இல்லை என்றும், அத்தகைய முடிவை எடுக்க வைத்து விடாதீர்கள் என்றும் கமல் மேலும் கூறியிருக்கிறார்.
அந்த தொலைக்காட்சி நேர்காணலின் முழு காணொளி வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: