Home நாடு 10-க்கும் குறைவான மாணவர்கள் – 176 பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

10-க்கும் குறைவான மாணவர்கள் – 176 பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

921
0
SHARE
Ad

MAHDZIR KHALIDகோலாலம்பூர் – நாடெங்கிலும் 176 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அப்பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது.

இது குறித்து கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் கூறுகையில், “நாடெங்கிலும் 2,986 பள்ளிகளில் 150-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். அவற்றில் 2,058 தேசியப் பள்ளிகளும், 578 சீன தொடக்கப் பள்ளிகளும், 360 தமிழ்ப் பள்ளிகளும் அடங்கியுள்ளன.குறிப்பாக, 44 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். மேலும் 132 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.”

“எனவே மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள மொத்தம் 176 பள்ளிகளை மூடவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கவோ கல்வித்துறை யோசித்து வருகின்றது” என்று மாட்சிர் தெரிவித்திருக்கிறார்.