Home கலை உலகம் வரும் சனிக்கிழமை பிரிக்பீல்ட்சில் இளையராஜாவைச் சந்திக்கலாம்!

வரும் சனிக்கிழமை பிரிக்பீல்ட்சில் இளையராஜாவைச் சந்திக்கலாம்!

1185
0
SHARE
Ad

ilayaraja (1)கோலாலம்பூர் – வரும் அக்டோபர் 7-ம் தேதி, புக்கிட் ஜாலில் உள்ளரங்கில், இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெறவிருக்கும், ‘ராஜா ஒன் மேன் ஷோ’ என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சனிக்கிழமை பிரிக்பீட்ல்சில் நடைபெறவிருக்கிறது.

இந்த அறிமுக விழாவில், கலந்து கொள்ள இளையராஜா மலேசியா வருகிறார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மை ஈவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாகுல் ஹமிட் யாவுட் தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை மாலை பிரிக்பீல்ட்சில், உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சரியாக 8 மணியளவில் இளையராஜா மேடையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கவிருப்பதாகவும் ஷாகுல் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனவே, வரும் சனிக்கிழமை பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாக வந்து கலந்து கொண்டு, இளையராஜாவைச் சந்திப்பதோடு, வரும் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறவிருக்கும் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஷாகுல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.